அனீமியா என்பது என்ன? எப்படி சரி செய்யலாம்?

இரத்தசோகை (anemia) என்பதே இரும்பு சத்து குறைவு என்று கூறப்படுகிறது. உடலில் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதே இதன் பொருளாகும். இரத்த சிவப்பணுக்களே உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வன.

இரத்தசோகைக்கான காரணம்

இரும்பு சத்து குறைவதினால் இரத்த சிவப்பணு உற்பத்தி குறைகிறது. ஆகவே, உடலின் செல்களுக்கு செல்லும் உயிர்வளியின் (ஆக்ஸிஜன்) அளவு குறைகிறது. இதனால் உடல் சோர்வும், மூச்சிரைப்பு ஏற்படுகிறது.

அறிகுறிகள்

இரும்பு சத்து சிறிது குறைவாக இருக்கும்போது எந்த அறிகுறியும் தெரியாது. ஆனால், இரத்தசோகையின் அளவு அதிகரிக்கும்போது அதிக அசதி, பெலவீனம், சருமம் வெளிருதல், நெஞ்சு வலி மற்றும் படபடப்பு, மூச்சிரைப்பு, தலைவலி, தலைசுற்றல், கைகள் மற்றும் பாதங்கள் குளிர்ந்துபோதல், நாக்கில் அழற்சி, பசியின்மை அல்லது ஊட்டச்சத்தில்லா உணவுகள்மேல் நாட்டம் ஏற்படும்.

இரும்பு சத்து தரும் உணவுகள்

பச்சை கீரைகள், ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி இறைச்சி, மீன்கள், முட்டை, பயிறு வகைகள், வால்நட், முந்திரி, அல்மாண்ட், ஓட்ஸ், குயினா போன்ற முழு தானியங்கள், பூசணி விதைகள் இவற்றை சாப்பிட்டு இரும்பு சத்து குறைபாட்டை நீக்கலாம்.

More News >>