ஒளிந்திருக்கும் திறமையை ஒளிரச்செய்யும் இசைப் பள்ளி!
சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ளது பீத்தோவன் இசைப்பள்ளி. இங்கு கீபோடு, கிடார், ட்ரம்ஸ், மற்றும் பாட்டு ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. கர்நாட்டிக்-வெஸ்ட்டன் ஆகிய இரண்டும் கற்பிக்கப்படுகின்றன. அனுபவமிக்க ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்துகின்றனர்.
இங்கு மூன்று வயது சிறுவர் முதல் 77 வயது முதியவர் வரை பயில்கின்றனர். மாணவர்கள் இல்லத்தரசிகள், கல்லூரி மாணவர்கள், திரை இசைக் கலைஞர்கள் என பலரும் பயில்கின்றனர். திரை இசைத்துறையில் பணியாற்ற விரும்பும் பலர் இங்கு அதற்கான பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
2011-ஆம் ஆண்டில் தொங்கப்பட்ட பீத்தோவன் இசைப்பள்ளியில் இதுவரையில் 500-க்கும் மேற்பட்டோர் பயின்று சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். பலர் இசைத்துறையில் சிறந்து விளங்குகின்றனர். இங்குப் பயில்வோருக்கு உலகப் புகழ்பெற்ற டிரினிட்டி இசைக்கல்லூரியின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இந்த இசைப்பள்ளி காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் செயல்படுகின்றது. இசை வாசிக்கக் கற்றுக் கொடுப்பதுடன் சவுண்டு என்ஜினியரிங் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
மூன்று மாத காலத்திற்கு ஒருமுறை மூத்த கலைஞர்களை அழைத்துவந்து சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மேலும், பல்வேறு போட்டிகள், நிகழ்சிகள், பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு திறமை வெளிப்பட களம் அமைத்துத் தரப்படுகின்றது. அந்தவகையில் இம்மாதம் (ஏப்ரல்) 30-ஆம் தேதி பயிற்சி வகுப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இசைப் பள்ளியை, திரைப்படம் மற்றும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஜெய்கீ நடத்தி வருகின்றார். இவர் ‘365 காதல் கடிதங்கள்’ என்ற படத்திற்கு இசையமைத்தவர். மேலும், தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் 15-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கும், பல குறும்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். சாய்பாபா, இயேசு கிறித்துவைப் பற்றிய இசை ஆல்பம் உளிட்டவைகளையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் கூறுகையில், “எளிய மக்களும் இசை பயில வேண்டும் என்பது எனது நோக்கம்” என்கிறார் அமைதியாக.
தொடர்புக்கு... பீத்தோவன் இசைப்பள்ளி - 7299111991/ 7299111992
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com