மத்திய பட்ஜெட் 2021! எதிர்பார்ப்புகளை ஈடு செய்வாரா நிதியமைச்சர்?
இன்று பிப்ரவரி 1 மத்திய அரசின் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். கொரோனா என்னும் கொடும் அரக்கனின் பிடியில் சிக்கி சின்னாபின்னமான ஒவ்வொரு சிறு குறு தொழிலாளர்களின் மூச்சுக்காற்றை நீடிக்க வைக்குமா இந்த பட்ஜெட் என்ற கேள்வியும், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகள் சாமானிய மக்களின் அதிர்ப்தியை பெற்றாலும், இந்த பட்ஜெட்டில் அதற்கான தீர்வுகள், வாழ்வாதாரத்திற்கான நம்பிக்கை மற்றும் இனி கடந்த போக பொருளாதார உதவிகள் என பல எதிர்பார்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த பட்ஜெட்டில் முக்கியமாக எதிர்பார்க்கப்படுவது வருவாய், செலவு, நிதி பற்றாக்குறை, சுகாதாரம் மற்றும் ஜிடிபி வளர்ச்சி ஆகிய ஐந்து முக்கிய விடையங்களுக்கான தீர்வு இந்த பட்ஜெட்டில் கிடைக்குமா? கொரோனா பெருந்தொற்றுக்கு பின் சமர்ப்பிக்கப்படும் முதல் பட்ஜெட் இது. மேலும் இந்த பட்ஜெட் காகிதங்கள் இல்லா முறையில் சமரிபிக்கப்படுகிறது. ஆகையில் அனைவரும் தெரிந்து கொள்ள மடிக்கணினி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நலிவடைந்த தொழிலாளர்கள் முதல் விவசாயிகள், வெகு ஜன பிரஜைகள் மற்றும் மாணவர்கள் வரை ஏதேனும் சலுகை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இந்த 2021 பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அணை பாதுகாப்பு மற்றும் மின்சார மசோதாக்களை நிறைவேற்ற உள்ளது. மேலும் 5 நிதி மசோதாக்கள் மற்றும் 38 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. விவசாய கடன் தள்ளுபடி, கூட்டுறவு கடன் மற்றும் கல்வி கடன் போன்ற சலுகைகள், வருமான வரி உச்ச வரம்பு போன்றவற்றின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த பட்ஜெட் பற்றிய தகவல்களை union budget என்ற ஆஃப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.