பிரபல தமிழ் நடிகைக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..

தமிழில் புதிய காற்று, ஒன்னும் தெரியாத பாப்பா, தங்கமான தங்கச்சி, இதுதான்டா சட்டம், ஆனஸ்ட் ராஜ் போன்ற படங்களில் நடித்தவர் ஆம்னி. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் தயாரிப்பாளர் காஜா மைதீன் என்பவரை மணந்துகொண் டார். ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சீனியர் நடிகையாகிவிட்ட ஆம்னி தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். அகில் நடிக்கும் மோஸ்ட் எளிஜிபில் பேச்லர் உள்ளிட்ட 3 தெலுங்கு படங் களில் நடித்து வருகிறார். ஆம்னிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து திரையுலகினரும், சக நடசத் திரங்களும் அவரது உடல் நிலை குறித்து கவலை அடைந்தனர். ஆனால் பின்னர் இந்த தகவலை அறிந்த ஆம்னி தனது உடல் நிலைபற்றி கூறும் போது,எனக்கு மாரடைப்பு எதுவும் ஏற்படவில்லை. அந்த தகவல் முற்றிலும் பொய்யா னது. உணவு ஒவ்வாமை (ஃபுட் பாயிஸன்) ஆகிவிட் டது, இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதை யடுத்து மருத்துவமனைக்கு சென்று சிக்ச்சை பெற்றேன் என்றார். அம்னி நடித்த அம்மா தீவேனா என்ற தெலுங்கு படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. திரையுலகில் பல நடிகர், நடிகைகள் கொரோனா காலகட்டத்தில் பாதிப்புக் குள்ளாகினர். மாரடைப்பிலும் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்தி நடிகர்கள் ரிஷு கபூர், இர்பான் கான், கன்னட நடிகர் சிரஞ்சீவு சார்ஜா ஆகியோர் மாரடைப் பில் மரணம் அடைந்தனர். நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், எஸ்.எஸ்.ராஜமவுலி, சரத் குமார், ராம் சரண், வருண் தேஜ், டி.ராஜேந்ந்தர், நடிகை கள் தமன்னா. நிக்கி கல்ராணி, ரகுல் ப்ரீத் சிங், ஜீவிதா, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன் போன்ற பலர் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். நடிகர், நடிகைகள் உடல் நிலை பாதிக்கப்படும்போது அவர் கள் நடிக்கும் படங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே உடல்நிலை பராமரிப்பதில் அவர்கள் கவனமாக செயல் பட வேண்டும் என்று திரையுலகினர் கூறுகின்ற்னர்.

More News >>