லாரி ஏற்றி சப் இன்ஸ்பெக்டர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சரக்கு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாலு. நேற்று இரவு இவர் கொற்கை என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது முருகவேல் என்பவர் குடிபோதையில் ஒரு வாகனத்தை இயக்கியது தெரிய வரவே வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் அவரை எச்சரித்து அனுப்பி இருக்கிறார்.
சிறிது நேரத்தில் வேறொரு சரக்கு லாரிகள் எடுத்துக் கொண்டு வந்த முருகவேல் பணியில் அதே இடத்தில் நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வாலு மீது காரை ஏற்றிவிட்டு வந்த வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பாலு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே வாகனத்தை ஏற்றி கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தை தூத்துக்குடி எஸ்பி ஆய்வு செய்தார்.