கொரோனா தடுப்பு ஊசி ரிசல்டுக்காக காத்திருக்கும் இயக்குனர்..
திரையுலகில் கொரோனா பாதிப்பு என்பது உயிரிழைப்பை மட்டுமல்ல பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பல படங்கள் முடிக்கப்பட்டு ரிலீஸ் செய்ய முடியாமலிருக்கிறது. கடந்த ஆண்டு முடிந்து திரைக்கு வந்திருக்க வேண்டி அண்ணாத்த, வலிமை போன்ற படங்கள் இன்னும் ஷூட்டிங் நடந்துக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் கொரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கொரோனா தளர்வில் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தும் ஷூட்டிங் தொடங்காமலிருந்தது. கடந்த நவம்பர் 13ம் தேதி மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார். திடீரென்று படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. மறுநாள் ரஜினிகாந்த்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார்.
ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டத்தால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தல் மே மாதம் நடக்கும் என்று கூறப்படும் நிலையில் அதற்குள் படப்பிடிப்பை முடிக்கலாமா என்று இயக்குனர் சிவா ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து ரஜினியை சந்தித்த பேசினார். கொரோனா தடுப்பூசி தற்போது இந்தியாவில் கண்டு பிடிக்கப்படிருக்கிறது. அதன் முடிவு வரும்வரை ஒரு இயக்குனர் பட ஷுட்டிங் தொடங்காமலிருக்கிறார். அவர் இயக்குனர் வெற்றி மாறன் தான். சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குகிறார் வெற்றி மாறன்.
ஹீரோயினாக ஆண்ட்ரிய நடிக்கிறார். இதில் வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். ஜல்லிக்கட்டு பின்னணியில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. மேலும் இந்த படப்பிடிப்புக்கு ஆயிரக்கணக்கில் துணை நடிகர், நடிகைகள் பங்கேற்கவேண்டி உள்ளது. கொரோனா காலகட்டத்தில் இவ்வளவு கூட்டத்தை வைத்துக்கொண்டு படப்பிடிப்பு நடத்துவது சிரமம் என்று இயக்குனர் எண்ணுகிறார். கொரோனா தடுப்பு மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுட்டது. அதை மக்களுக்கு அளித்து வருகின்றனர். அதன் முடிவு என்ன என்பது பற்றி பலரும் எதிர்பார்கின்றனர். அந்த முடிவுக்காக வெற்றி மாறனும் காத்திருக்கிறார். அதன் முடிவு தெரிந்த பிறகு தனது படத்தை இயக்க தொடங்க எண்ணி உள்ளார். தற்போது சூரி நடிக்கும் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுபகுதியில் நடந்து வருகிறது.