7 வருடம் நிறைவு செய்த நடிகை புதுவீட்டில் குடியேறினார்..
நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு திருமணம் செய்தார். பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்த நிலையில் புதுவீடு கட்டி குடிபுகுந்தார். கணவர் இன்ட்டீரியர் டிசைனர் என்பதால் அவருடன் சேர்ந்து காஜலும் இன்ட்டீரியர் பணி ஆலோசனையில் ஈடுபட்டார். தற்போது அவரது தொழில் பார்டன்ராகவும் ஆகிவிட்டார். தற்போது மற்றொரு தமிழ் நடிகை புதுவீடு கட்டி குடியேறி இருக்கிறார். டார்லிங். மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு, மரகத நாணய்ம், யாகாவராயினும் நாக்காக் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கிறார். நடிகை நிக்கி கல்ராணி திரையுலகில் ஏழு ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.
இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். ஏழு வருடங்கள் நிறைவு செய்தி ருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நான் நன்றிகடன்பட்டிருக்கிறேன் என்றார். மேலும் அவர் கூறும்போது, “பலவித கதாபாத்திரங்கள் ஏற்றுள்ளேன். அதில் உணர்ச்சிகள், சிரிப்பு, நாடகம் மற்றும் இன்னும் பல உள்ளடக்கம். இந்த அற்புதமான 7 ஆண்டுகளில் ரசிகர்களாகிய நீங்கள் இல்லாமல் நான் இல்லை. உங்கள் நிலையான அன்பு மற்றும் ஆதரவால் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றார். நிக்கி புதுவீட்டு குடியேறிய வீடியோவை பகிர்ந்தார். வீட்டில் சிறப்பு பூஜை மேற்கொண்டார். நிக்கிக்கு விலங்கள் மீது அலாதி ப்ரியம். அவர் சிறுவயதிலிருந்தே நாய் வளர்க்க வேண்டும் ஆசைப்பட்டவர்.
ஆனால் அவரது பெற்றோர் அனுமதிக்க வில்லை. சென்னை வந்த பிறகு தனியாக இருக்க வேண்டிய நிலையிருந்ததால் செல்ல நாய் வளர்க்கத் தொடங்கினார். சமீப்பத்தில் இவர் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது திடீரென்று அப்பகுதிக்கு சில குரங்குகள் வந்தன. அதை படப்பிடிப்பிலிருந்தவர்கள் விரட்டியபோது அதை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி அதை நெருங்கி சென்று பிஸ்கட் கொடுத்தார். அவைகளும் பிஸ்கட் வாங்கி சாப்பிட்டன. பிறகு அதனுடன் கைநீட்டி கைகுலுக்கினார். நிக்கி கல்ராணி தற்போது ராஜவம்சம், வட்டம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.