காஜல் அகர்வால் கணவர் பற்றி மச்சினியின் ஒப்பினியன்..
நடிகை காஜல் அகர்வால் கமலின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இரண்டு படப்பிடிப்புகளும் நடந்தன. இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கிரேன் விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது, ஆச்சார்யா படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. ஷூட்டிங் ஷூட்டிங் என்று மாநிலம் விட்டு மாநிலம் பறந்து கொண்டிருந்த காஜல் லாக் டவுன் அறிவித்ததும் வீட்டில் முடங்கினார். அந்த நேரம் பார்த்து காஜலுக்கு திருமண யோகம் வந்தது. பாய்ஃ பிரண்ட் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக்கொண்டார். பிறகு கணவருடன் மாலத்தீவு சென்று தேனிலவு கொண்டாடினார்.
ஆசை தீர ஒரு மாதம் முழுவதும் அங்கு தங்கி இருந்து பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு கணவருடன் சுற்றுதிரிந்தார். கடலில் ஸ்கூபா டைவிங் செய்தார். பிறகு கடலுக்கு அடியிலிருக்கும் உணவகத்தில் அமர்ந்து ரசித்து உண்டார். அடிக்கடி வீட்டு ஞாபகம் வந்ததும் தங்கை மற்றும் அவரது குழந்தையுடன் நெட்டில் சாட் செய்து வந்தார். கவுதம் கிட்ச்லு ஒரு தொழில் அதிபர். இண்டீரியர் டிசைனர் நிறுவன அதிபராக இருக்கிறார். காஜலை திருமணம் செய்ததும் அவருடன் தனிகுடித்தனம் நடத்த தனி பங்களா கட்டினார். அங்கு பால் காய்ச்சி குடிபுகுந்தனர். காஜலுக்கு லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்ததும் சென்று கலந்துகொண்டார்.
சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். வெப்சீரீஸ் ஒன்றிலும் நடித்து முடித்தார். காஜல் படப்பிடிப்பில் பிஸியாகி விட்டார். இந்நிலையில் காஜலின் தங்கையுமான நடிகை நிஷா அகர்வால் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், உங்கள் அக்கா கணவர் கவுதம் கிட்ச்லு தொழி அதிபராக இருக்கிறாரே அவர் பெரிய பணக் காரரா? என்றார். அதற்கு பதில் அளித்த நிஷா, கவுதம் கிட்ச்லு அறிவில் பெரிய பணக்காரார். நல்ல உள்ளம் படைத்தவர் என்றார். ரசிகருக்கு நிஷா அகர்வால் அளித்த பதிலை கவுதம் கிட்ச்லுவும் பார்த்து லைக் செய்தார். அக்கா கணவரை பற்றி உயர்வாக கருத்துசொன்ன நிஷா அகர்வாலுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.