கோடை விடுமுறைப் பயணமா..? நோட் பண்ணிக்கோங்க..!

கோடை விடுமுறை தொடங்கியாச்சு. விடுமுறை 'ப்ளான்' எல்லாம் ஏற்கெனவே தயார் செய்திருப்பிங்க. கூடவே ஒரு முக்கியமான விடுமுறை திட்டத்தையும் கண்டிப்பா சேர்த்துக்கணும்.

விடுமுறை ஸ்பாட், ஹோட்டல், பஸ், கார் என ப்ளான் பண்ணும்போதே உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்தும் ப்ளான் செய்துக்கணும். இது விடுமுறைக் கொண்டாட்டத்தை இன்னும் குதூகலமாக்கும் ப்ரெண்ட்ஸ்..!

பயணங்களின் போது நாம் சோர்வாவது வழக்கம். ஆனால், ஒரு உற்சாகத்தில் ஓடிக்கொண்டிருப்போம். உங்கள் பயணத்தில் எந்த ஒரு விதத்திலும் உடற்பயிற்சி கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக வாக்கிங், ஸ்விம்மிங் என ஏதாவது ஒன்றை தினமும் தொடர வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கோடை விடுமுறை என்றாலே சூரியனின் ஒட்டுமொத்த ஆசிர்வாதமும் நம் தலையில்தான் விழும். இந்த சூழலில் கோடை தாக்கத்தைத் தணிக்க பார்க்கும் இடங்களில் எல்லாம் இளநீர், ஜூஸ், ஐஸ்கிரீம் என ஒரு கை பார்ப்போம்.

ஆனால், இதெல்லாம்விட தண்ணீர் பாட்டிலை கையோடு வைத்திருப்பது அவசியம். உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதிலும் தண்ணீரின் பங்கு மிகப்பெரியது. தண்ணீர்தான் பசியையும் தாகத்தையும் பிரித்து அடையாளம் காட்டும். 

விடுமுறை பயணங்களின் போது கிடைக்கும் இடத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என விட்டுவிடாதீர்கள். சில பிஸ்கெட் பாக்கெட்டுகள், சாக்லெட்ஸ், ஜீரணத்துக்கு உதவும் வெந்தயம், சீரகம் போன்றவற்றை பயணங்களின்போது எப்போதும் கையோடு வைத்திருங்கள்.

பயணங்களின் போது உலர்ந்த திராட்சை, பாதாம் போன்ற உலர்பழங்கள் நல்ல ஸ்நாக்ஸ் ஆகவும் உடல்நலத்துக்கு கூடுதல் எனர்ஜி தருவதாகவும் இருக்கும். ஃப்ரெஷ் பழங்களும் அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

More News >>