மத்திய அரசின் SVAMITVA திட்டம்!

மத்திய அரசு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் கடந்த 24 ஏப்ரல் 2020 அன்று "SVAMITVA" எனும் திட்டத்தை தேசிய பஞ்சாயத்து தின கொண்டாட்டத்தின் போது அறிவித்தது. இந்த திட்டம் அந்தந்த மாநிலங்களில் உள்ள வருவாய் துறை மற்றும் நோடல் அமைப்புகளின் மூலம், பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தலைமையில் நடைமுறை படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம அளவிலான நிலங்களின் தொகுப்புகளை சரிபார்த்தலுக்கான தீர்வுகளை அடைவதற்காக நடைமுறை படுத்தப்பட்டது. மேலும் வாழ்வாதார நிலப்பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை டிரோன் மூலம் கணக்கெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. மேலும் "நிலங்களின் உரிமை " என்ற கோட்பாட்டினை இலக்காக அடைய இந்த திட்டம் உதவிகரமாக அமையும்.

இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் உள்ள அனைத்து உரிமையாளர்களுக்கு நில அட்டை வழங்கப்படும்.

இந்த நில ஆவணங்களின் மூலம், சட்ட பிரச்சனைகள் மற்றும் நிலம் சார்ந்த அல்லது ஆவணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வு காணப்படும்.

இந்த நில ஆவணங்களை ஒரு நிதி ஆதாரமாக பயன்படுத்த உரிமையாளர்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். இந்த ஆவணங்களின் மூலம் வங்கி கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

கிராமப்புற திட்டங்களுக்கு பயன்படும் வகையில் இந்த சர்வே எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டமானது 114518 கிராமங்களிலும் நடைமுறை படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>