விஜே சித்ராவின் மரணம் முழுக்க முழுக்க தற்கொலையே.. உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு தாக்கல்..

தொகுப்பாளினியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகிய சித்ரா தனது சொந்த உழைப்பில் முன்னேறி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவரின் உள்ளங்களை தனது பக்கம் இழுத்துக்கொண்வர். இச்சிறப்பு மிகுந்த சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சித்ரா தற்கொலை செய்துகொண்ட நாளில் அவரது கணவர் ஹேம்நாத்தும் அந்த ஹோட்டலில் தங்கி இருந்ததால் போலீஸ் அவர் மேல் சந்தேகப்பட்டு விசாரணைக்காக டிசம்பர் 14 ஆம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஹேம்நாத்தின் தந்தை ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சித்ராவுக்கு ஹேம்நாத்க்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை எனவும் சித்தரவுடன் நடிக்கும் நடிகர்களின் உறவுகளை வைத்து அவரை சந்தேகப்படவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தது.

இதனால் எந்த தவறும் செய்யாத எனக்கு ஜாமீன் தருமாறு அவரது மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிபுணர் குழு உயர் நீதிமன்றத்தில் சித்ரா செய்து கொண்டது முற்றிலும் தற்கொலை தான் என்ற செய்தியை தாக்கல் செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான 13 பேரை விசாரித்து எடுக்கப்பட்டவை என்றும் கூறியுள்ளது. இதனால் வழக்கை வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

More News >>