10,000 கி.மீ பயணம்.. வெறித்தனமாக பைக் ரைடர்.. நடிகர் அஜித் ஒரே முறையில் சக ரைடர்!
நாம் நடிகர் அஜித்தை மதிக்கிறோம் என்றால் அவரது பிரைவசியையும் மதிக்க வேண்டும் என பைக் ரைடர் தினேஷ் தெரிவித்துள்ளார். இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்பாகவுள்ளது.
இதற்கிடையே, பைக் ரைட்டில் அதிகம் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், சமீபத்தில் சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்னும் சில தினங்களில் சென்னை திரும்ப உள்ளார் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், அஜித்தின் பைக் ரைடு குறித்து அவருடன் பைக் பயணத்தில் ஈடுபட்ட பைக் ரைடரான தினேஷ் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். பைக் ரைடர் தினேஷிடம், அஜித் ரசிகர் ஒருவர்இ தலயுடன் பயணித்த வீடியோ காட்சிகளை யூடியூப்பில் பதிவேற்றும்படி கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்த தினேஷ், 'நிச்சயம் முடியாது. எனக்கு அஜித்சார் பற்றி தெரியும். அவர் பிரைவசியை விரும்புபவர்.
நாம் அவரை மதிக்கிறோம் என்றால் அவரது பிரைவசியையும் மதிக்க வேண்டும். நான் கேமராவில் பொருத்தும் கேமராவைக் கூட பொருத்தவில்லை. என்னுடைய செல்போனைக் கூட பயன்படுத்தவில்லை. சோஷியல் மீடியாக்களில் பரவும் புகைப்படமும் அவரின் அனுமதி பெற்று எடுத்ததுதான். அவர் ஒரே முறையில் 10,000 கிலோ மீட்டர் பயணம் செய்தார். அவரும் அவரது நண்பர்களும் 10,000-க்கும் அதிகமான கி.மீ பயணம் செய்துள்ளனர். ஒரு வெறித்தனமாக பைக் ரைடர்' அஜித் சார் என்றும் தெரிவித்துள்ளார்.