புவியை சுற்றி பார்க்க சொந்த விமானம் வாங்கிய அமெரிக்க தொழிலதிபர்!

அமெரிக்காவில் விண்வெளியில் அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் சொந்தமாக SpaceX விமானத்தை வாங்கியுள்ளார். அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த 38 வயதான தொழிலதிபர் ஜாரெட் ஐசக்மேன், ஷிப்ட்4பேமெண்ட்ஸ் என் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தமான ஜாரெட் ஐசக்மேன், விமானி என பன்முக திறன் கொண்டவராக திகழ்கிறார்.

இந்நிலையில், விமானம் மீது கொண்ட பற்று காரணமாக, SpaceX நிறுவனத்திடமிருந்து சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மிஸ்க் சொந்தமான நிறுவனம் SpaceX என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஜாரெட் ஐசக்மேன் கூறுகையில், அடுத்த 50 - 100 ஆண்டுகளில் உலக மக்கள் விண்கலத்தில் பறந்து நிலவை குடும்பத்துடன் சுற்றி வருவதெல்லாம் சாத்தியமாகும்.

நான் வாங்கிய விமானத்தில்,நான்கு பேர் வரை பயணிக்க முடியும். அதில் நான் உட்பட மேலும் மூவர் புவி வட்டப்பாதையை இந்த விமானத்தை கொண்டு சுற்றி வர உள்ளோம். தற்போது, விமானத்தில் இரண்டு இருக்கைகள் நிரம்பிவிட்டன. மீதமுள்ள ஒரே ஒரு இருக்கையில் பயணிப்பதற்கான நபரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க உள்ளேன். இந்த பயணத்தில் மூலம் திரட்டப்படும் நிதியை புனித ஜூட் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் கொடுக்க உள்ளேன் என்றார்.

இந்த பயணத்தில் மூலம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட ஜாரெட் முயற்சி செய்கிறார். இருப்பினும் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையான நிதியை ஜாரெட் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்தாண்டில் புவியை சுற்றி பார்க்க உள்ளதாகவும் ஜாரெட் கூறியுள்ளார்.

More News >>