தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு அனுமதி

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ம் தேதி கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. முதல் கட்டமாக டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இந்த தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளும் இந்தத் தடுப்பூசியைப் போட அரசு அனுமதி அளித்துள்ளது.

முதல் கட்டமாக 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றி தடுப்பூசி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த தடுப்பூசி போடும் பணி நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் அப்பல்லோ, சிம்ஸ் உள்ளிட்ட சில தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சென்னையில் அப்பல்லோ, எஸ்ஆர்எம் உள்ளிட்ட 34-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மதுரை கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

More News >>