தன்படம் பற்றி தனுஷின் நம்பிக்கை நிறைவேறுமா? ஜகமே தந்திரம் பட விவகாரம்..
தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள படம் ஜகமே தந்திரம். இப்படம் முடிந்து சுமார் ஒரு வருடமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சஷிகாந்த், ரிலையன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்திருக்கும் படம். அண்டர்வேல்டு தாதா கதையான இதன் படப்பிடிப்பு லண்டனில் நடந்துள்ளது. சுமார் 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. இப்படம் தியேட்டரில் வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்கள் படம் ஒடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இது தொடர்பாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கும், தனுஷுக்கும் ரசிகர்கள் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மெசேஜில், தியேட்டர் அதிபர்கள், திரையிடுபவர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா அபிமானிகள், ரசிகர்கள் ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என்று விரும்புவதுபோல் நானும் நம்புகிறேன் என தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்த்தில் சுற்றுலா தல மேம்பாடு விதிமுறைகள் படி அங்கு நடக்கும் படப்பிடிப்புகளுக்கு மானியம் தரப்படுகிறது. தியேட்டரில் வெளியிட்டால்தான் மானியம் என்றும் விதிமுறையில் கூறப்பட்டுள்ளதாம். அதனால் இப்படத்தையும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய காத்திருந்தனர். தற்போது கொரோனா காரணத்தால் அந்த விதி தளர்த்தப்பட்டததால் படத்தை ஒடிடிக்கு பெரும் தொகைக்கு விற்றிருப்பதாக தெரிகிறது.
ஆனாலும் ஏற்கனவே தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் குறிப்பிடபடி படத்தை தியேட்டரில் வெளியிட விரும்புகின்றனர். ஆனால் தயாரிப்பு தரப்பு ஒடிடியில் படத்தை ரிலீஸ் தற்போது தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் ஒடிடிக்கு செல்வதாக இருந்த சில படங்கள் மீண்டும் தியேட்டர் ரிலீஸுக்கு திரும்பி உள்ளது. ஜகமேதந்திரம் ரிலீஸின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கு இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. தனுஷ் விருப்பத்துக்கு பட தயரிப்பு நிறுவனம் செவி சாய்க்குமா என்பதற்கும் அப்போது விடை கிடைக்கும். அனுமதி கிடைத்திருப்பதால் செய்ய தயாராகிவிட்டதாம். அதேசமயம் படத்தை தியேட்டரில், ஒடிடியில் ஒரே நாளில் ரிலீஸ் செய்யலாம் என்ற பேச்சும் இருக்கிறதாம். இதுகுறித்து பட தயாரிப்பாளர்கள் முடிவுக்கும் திரையுலகினர் காத்திருக்கின்றனர்.