துபாய் சென்று வெற்றியை கொண்டாடிய மாஸ்டர் டீம்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் தடைபட்டது. தியேட்டர் திறப்புக்கு கோரிக்கை வைத்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா விதிமுறைகளின்படி 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என்றதால் மாஸ்டர் ரிலீஸ் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. பொங்கல் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக 100 சதவீத அனுமதி கேட்டபோது தமிழக அரசு அனுமதி வழங்கியது.
ஆனால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றதால் மீண்டும் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என அரசு அறிவித்தது. ஆனாலும் மாஸ்டர் படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. சில நாட்களிலேயே 200 கோடி வசூல் பெற்று சாதனை படைத்தது. இன்னமும் தியேட்டர்களில் மாஸ்டர் படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒடிடி தளத்திலும் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. படத்தின் வெற்றியை கொண்டாட பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர் அனிருத், மாஸ்டர் பட கோ புரட்யூசர் ஜெகதிஷ் ஆகியோர் துபாய் சென்று மாஸ்டர் பட வெற்றியை கொண்டாடினார்கள்.
அந்த படங்கள் நெட்டில் வெளியாகி வலம் வந்துக் கொண்டிருக்கிறது. பட வெற்றியை கொண்டாட படக்குழுவினர் வெளிநாடு செல்வது புதிதல்ல என்றாலும் இப்படம் கொரோனா பாதிப்பு காலத்தில் வெளியாகி அதுவும் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் ரூ 200 கோடி வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கதென்பதால் இந்த வெற்றியை சிறப்பானதாக கருதுகின்றனர். இப்படத்தையடுத்து விஜய் நடிக்கும் 65வது படத்துக்கு மீண்டும் அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். மூன்றவது முறையாக விஜய் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.