கோப்ராவை நிறுத்திவிட்டு அடுத்த ஷூட்டிங் போகும் ஹீரோ.. 200க்கும் மேற்பட்டவர்கள் நடிக்கும் காட்சி..

நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தின் பெரும் பகுதி ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் மணிரத்னம் இயக்கும் பொன்னி செல்வன் படத்தில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்துக்காக நீண்ட தலைமுடி வைத்து நடிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு வட நாட்டிலும் மற்றும் ஐதராபாத்திலும் நடந்தது. வட நாட்டு படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொண்டு நடித்தார். கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் தடையாகி பிறகு மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யாராய் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்குவது நிறுத்திவைக்கப்பட்டது. கொரோனா தொற்றில் குணமாகி வீட்டில் ஓய்வில் இருந்தார் ஐஸ்வர்யாராய் முழுமையாக பழைய உடல் நிலைக்கு திரும்பிய பிறகு படப்பிடிப்பில் பங்கேற்க சம்மதித்தார். இதையடுத்து கடந்த மாதம் மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பில் ஐஸ்வர்யாராய் கலந்து கொண்டார். அவருடன் சரத்குமார் நடித்த காட்சிகள் மற்றும் திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி. ரஹ்மான், ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் விக்ரம் நடிக்கும் காட்சிகளும் படமாக உள்ளது. இதையடுத்து கோப்ரா படப்பிடிப்பிலிருந்த அவருக்கு மணிரத்னம் படத்திலிருந்து அழைப்பு வந்தது.

தற்போது கோப்ரா படப்பிடிப்பை நிறுத்திவிட்டு பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு செல்கிறார் விக்ரம். இந்த படப்பிடிப்பு ஜனத்திரளுடன் நடக்கவிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். இதுவொரு பிரமாண்ட பாடல் காட்சியாக உருவாகவிருக்கிறது. படத்தில் நடிக்கும் எல்லா நட்சத்திரங்களும் இக்காட்சியில் பங்கேற்க உள்ளனர். பொன்னியின் செல்வன் இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் 30 சதவீத ஷூட்டிங் படமாக வேண்டி உள்ளது. லைகா புரடக்‌ஷனுடன் மணிரத்னம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் கத்தி சண்டை பயிற்சி பெற்றுள்ளனர்.

More News >>