ஆந்திராவில் ஆடிப்பாடி ஆசிரியரை வழியனுப்பி வைத்த ஆதிவாசிகள்
ஆந்திராவில் 10 ஆண்டுகளாக கிராமப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து மாறுதலாகி சென்றவருக்கு ஆதிவாசிகள் அவரை தோளில் தூக்கி ஆடிப்பாடி வழியனுப்பி வைத்தனர். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் மல்லுகுடா என்ற கிராமத்தில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நரேந்திரா. மலைப்பிரதேசம் ஆனால் இங்கு ஆதிவாசிகளை இந்த கிராமத்தில் ஆதிவாசிகள் தான் அதிகம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணிபுரிந்து வந்த நரேந்திரா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சக ஆசிரியர்களும் உள்ளூர் மக்கள் இணைந்து அவருக்கு ஆதிவாதிகள் சம்பிரதாய முறைப்படி வழியனுப்பு விழா ஏற்பாடு செய்தனர்.
இந்த விழாவில் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியறிவை ஊட்டிய ஆசிரியர் நரேந்திராவை ஆதிவாசி மக்கள் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடல், பாடல்களுடன் கிராம வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் அவருக்கு பாதபூஜை செய்து. பாரம்பரிய முறைப்படி அவரை வழியனுப்பி வைத்தனர். தங்கள் கிராமத்திலிருந்து எந்த ஒரு அரசு ஊழியர் மாற்றலாகி அல்லது ஓய்வு பெற்று சென்றாலும் இப்படி ஆடிப்பாடி மரியாதை செய்து வழி அனுப்பி வைப்பது தங்கள் வழக்கம் என உள்ளூர் மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.