ஹாலிவுட்டை கலக்கிய ஆறு பேர் கைது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Hollywood என்ற அடையாளத்தை மாற்ற முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ்-ன் அடையாளங்களில் ஒன்று ஹாலிவுட் . உலக அளவில் புகழ்பெற்ற திரைப்பட நகரம் இது.இன்று 6 பேர் கொண்ட குழுவினர் ஹாலிவுட் என்ற லேண்ட் மார்க் இருக்கும்.
மலையின் மீது ஏறி Hollywood என்ற இடம் அருகே w என்ற எழுத்தை மறைத்து B வடிவில் நின்று "Hollyboob" என்று வரும் வகையில் நின்று கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைக்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதை ஊர்ஜிதம் செய்து கொண்ட போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.