புதுச்சேரி: ஹெல்மெட் அபராதம் விதிப்பதை நிறுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

பாண்டிச்சேரியில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்ட நிலையில், இதனால் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். எனவே அதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என முதல் அமைச்சர் நாராயணசாமி தடாலடி உத்தரவு பிறப்பித்துள்ளார் இதன்மூலம் முதல்வர் கவர்னர் மோதல் மீண்டும் வலுத்து வருகிறது. புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த கவர்னர் கிரன் பேடி உத்தரவிட்டிருந்தார். இதன்படி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் என்றும் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் முடக்கப்படும் என்றும், மூன்று மாதங்கள் வாகனங்களை ஓட்ட முடியாது என்றும் புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதிகாரிகள் சகட்டுமேனிக்கு அபராதம் விதிப்பதாக புகார்கள் வந்தது. கவர்னரின் இந்த உத்தரவு அராஜக செயல் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். மற்ற மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டங்களை அமல்படுத்தினாலும் கெடுபிடிகள் இல்லை ஆனால் புதுச்சேரி மாநில மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதாக நாராயணசாமி தெரிவித்தார். பாஜக நியமனம் செய்த கவர்னர் சட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிடுகின்றார். அதே புதுச்சேரி மாநில பாஜகவினர் ஹெல்மெட்டுக்கு தடை வேண்டி வலியுறுத்தி வருகின்றனர் இதன்மூலம் பாஜக இரட்டை வேடம் போடுகிறது.

இதைத்தொடர்ந்து புதிய போக்குவரத்து சட்டத்தை படிப்படியாக அமல்படுத்தலாம் என்றும் மக்களை துன்புறுத்தக்கூடாது. எனவே அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கவர்னர் முதல்வர் மோதல் மேலும் வலுத்து வருகிறது. புதுச்சேரியில் கவர்னராக கிரண்பேடி நியமிக்கப்பட்ட நாள்முதல் அவருக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோட்டார் வாகனச் சட்டம் குறித்து கவர்னரின் உத்தரவை செயல்படுத்துவதா அல்லது முதல்வரின் உத்தரவை செயல்படுத்துவதா என புரியாமல் போலீஸ் அதிகாரிகள் குழம்பிப்போய் உள்ளனர்.

More News >>