சிறுமியை சீரழித்த தாத்தாவுக்கு 34 ஆண்டு ஜெயில்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரண்டப்பள்ளியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவரை டாக்டரிடம் பெற்றோர்கள் அழைத்துச்சென்றனர் . சிறுமியை பரிசோதித்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது, அவரது வீட்டு அருகே வசித்து வந்த கோவிந்தராஜ் என்ற முதியவர் சிறுமியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததும், அதில் சிறுமி கர்ப்பமானதும் தெரிய வந்தது. இதையடுத்து பெற்றோர் போலீசில் புகார் செய்ய போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதியவர் கோவந்தராஜூக்கு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், பேத்தி முறை உள்ள உறவுக்கார பெண் என தெரிந்தும், தகாத முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆக மொத்தம் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விதித்து தீர்ப்பளித்தார்.