பிரபல நடிகையுடன் அதிக குழந்தைகள் பெறுவேன்.. பாப் பாடகர் புதிய திட்டம்..
குழந்தையின் மழலை சொல் கேட்க இயலாதவர்கள் தான் குழலின் ஓசை இனிது என்பார்கள் எனக் குறள் சொல்கிறது. 60 மற்றும் 70 களின் குழந்தை செல்வம் என்பது இறைவன் கொடுத்த வரம் என்று ஒவ்வொரு தம்பதியும் குறைந்த பட்சம் 10 குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமலானது இரண்டு குழந்தைகள் போதும் இரண்டுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம் என்றார்கள். பிறகு ஒன்றே நன்றி என்று கூற தொடங்கினார்கள். 50 வருடம் கழித்து அதன் பாதிப்பை இப்போது அனுபவிக்கிறார்கள்.
ஒரு குழந்தை இருக்கும் வீட்டில் அண்ணன், தங்கை அல்லது அக்கா தங்கை, அல்லது அக்கா தம்பி போன்ற உறவே இல்லை. இவர்களின் அடுத்த தலைமுறை கேள்விக்குறியாக நிற்கிறது. கூட்டுக் குடும்பமும் இல்லை.வருமானம் குறைவாக இருந்த 1960, 70ம் ஆண்டுகளில் குடும்பங்களில் 10 குழந்தை வைத்தும் குடும்பம் நடத்தியவர்கள் இன்றைக்கு லட்சங்களில் சம்பளம் வாங்குவதாகக் கூறிக்கொள்ளும் ஐடி மேதாவிகள் தங்களின் இ எம் ஐ கூட கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். குழந்தையைப் படிக்க வைக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
இதற்குக் காரணம் என்ன என்று யாரவது ஆராய்ந்தால் அதற்கு விடை பொருந்தாரா சீரழிவுதான் என்று எளிதாகச் சொல்வார்கள். இது இங்குள்ள நிலைமை அமெரிக்காவைப் பாருங்கள் அங்கு ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்கிறார்கள் என்று சிலர் கைகாட்டுகிறார்கள். தற்போது அமெரிக்கப் பாடகர் ஒருவர் கணக்கில்லாமல் குழந்தை பெறப் போவதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார். இப்படி சொன்னவர் யாரோ ஒருவர் அல்ல இந்தியாவின் மருமகன். ஆம், நம்மூர் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ்தான் இப்படி சொல்லி இருக்கிறார்.அமெரிக்க பாப் நட்சத்திரம் நிக் ஜோனாஸ் கடந்த 2018 ஆம் ஆண்டில் பிரியங்கா சோப்ராவை மணந்தார். பிரியங்கா அமெரிக்காவில் "குவாண்டிகோ" ஆங்கில வெப் சீரிஸில் நடிக்கச் சென்று அமெரிக்காவில் வசித்து வந்த போது நிக் ஜோனஸை சந்தித்துக் காதலித்தார்.
பிரியங்காவை விட வயதில் குறைந்தவராக நிக் ஜோனஸ் இருந்த போதும் இருவரும் வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகின்றனர்.சமீபத்தில் ஆன்லைன் உரையாடலின் போது பதில் அளித்த நிக் கோனஸ்,” தனது மனைவியுடன் நிறையக் குழந்தைகளைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும், தனது வாழ்க்கையில் புதிரின் முக்கியமான பகுதி பிரியங்கா தான்” எனத் தெரிவித்தார். மேலும் "பிரியாங்கா புதிரின் மிக முக்கியமான பகுதியாக இருந்தாலும் எங்களின் விருப்பம் வெளிப்படையாக நடக்கும். அதற்குக் கடவுளின் ஆகி இருக்கும் என்றார் நிக் ஜோனஸ்.