சர்ச்சையை கிளப்பும் ஆளுநர் - பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டியதால் பரபரப்பு!
நிர்மலா விவகாரம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித பென் நிரூபர் ஒருவரின் கன்னத்தை தட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்தும் ஆடியோ டேப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆளுநர் அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுவதாகவும், அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "நிர்மலா என்பது யார் என்றே தனக்கு தெரியாது என்றும் ஆனால் மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு சென்ற ஆசிரியை கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, இது குறித்து விசாரணை செய்வதற்கு சி.பி.ஐ விசாரணை அவசியம் இல்லை என்று தெரிவித்தார். உடனே செய்தியாளர்கள் ஏன் சி.பி.ஐ விசாரணை வேண்டாம் என கூறுகின்றீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு, தற்போது விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
அப்போது மேலும், மேலும் செய்தியாளர்கள் நிர்மலா தேவி விவகாரம் குறித்து பன்வாரிலால் புரோஹித்திடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கேள்வி எழுப்ப முயன்ற பெண் நிரூபரின் கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் தட்டியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com