கொரோனாவால் மூடப்பட்ட கல்லூரிகள் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தொடங்கும்.. அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டம்..
பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழுவதும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா நோய் அழையா விருந்தாளியை நுழைந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாக மக்களை வாட்டி வதைக்கிறது. கொரோனாவால் பல லட்ச உயிர்கள் பறிபோகின. கொரோனா மேலும் தீவிரமாக பரவாமல் இருக்க தமிழ்நாடு அரசாங்கம் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அறிவித்தது.
இதனால் பொருளாதாரம், நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை, கல்வி கற்கும் மாணவர்கள் என அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். கொரோனா படி படியாக குறைந்த நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. கொரோனா நோயால் ஒரு வருடத்திற்கு மேல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது. இதனால் அரசாங்கம் ஏழை மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன், இலவச டேட்டா போன்ற சலுகைகளை வழங்கியது. இந்நிலையில் ஜனவரி 19 ஆம் தேதி 10, 12 ஆம் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடரப்பட்டன.
இதையடுத்து பிப்ரவரி 8 முதல் பள்ளி கல்லூரிகள் முழுமையாக திறக்கலாம் என்று அரசாங்கம் அறிவித்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை என அனைத்து வகுப்புகளும் 8 ஆம் தேதி முதல் தொடங்கும். இதற்கான அட்டவணையும் பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதாவது BE, BTECH, ME, MTECH முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8 ஆம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15 ஆம் தேதியும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கும் என்று கூறியுள்ளனர்.