5 மொழிகளில் வெளியான பிரபல ஹீரோ டிரெய்லர்.. பான் இந்திய பட்டியலில் இணையும் நடிகர்..
சமீபாகாலமாக பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் பிரபல ஹீரோக்கள் படங்கள் ஒரு மொழியில் அல்லாமல் பல மொழிகளில் உருவாக்கப்படுகிறது. பிரபாஸ் நடித்த பாகுபலி, யஷ் நடித்த கே ஜி எஃப் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகி எல்ல மொழிலும் வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமே உருவாகி வந்த விஜய்யின் மாஸ்டர் படம் பிறகு பான் இந்தியா படமாக உருவாகி 5 மொழியில் வெளியாகி வெற்றிபெற்றது. அடுத்து உருவாகு பிரபாஸ், விஜய், சூர்யா, அல்லு அர்ஜூன், மகேஷ்பாபு போன்றவர்களின் படங்கள் பான் இந்தியா படமாக உருவாகிறது. அந்த வரிசையில் சிம்புவும் தற்போது இடம் பிடிக்கிறார்.
இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் நாயகன் சிம்பு என்கிற சிலம்பரசன் டி ஆர் நடித்து வரும் படம் "மாநாடு".. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின.
இந்தநிலையில் சிலம்பரசன் பிறந்தநாளில் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசரை தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியில் இயக்குநர் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ், தெலுங்கில் நடிகர் ரவிதேஜா மற்றும் கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிட்டனர். தமிழ் தவிர மற்ற மொழிகளில் இந்தப்படத்திற்கு ரீவைண்ட் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக சிலம்பரசனின் பட டீசர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் தனது பிறந்தநாளில் திரையுலகப் பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.