மஞ்சள் குடோனில் தீ விபத்து : 8 கோடி மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள மஞ்சள் பாதுகாக்கும் குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசமானது சுமார் 15 ஆயிரம் மூட்டைகள் தீயில் கருகியது. ராசி புரம் தீயணைப்புத் துறையினரும் நாமக்கல் மாவட்ட தீயணைப்புத் துறையினரும் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் க.மெகராஜ் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். தீ கட்டுக்குள் வராததால் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை . சம்பவ இடத்தில் காவல்துறையினர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.