தொழில் செய்ய முடியல சைரனை பயன்படுத்தக் கூடாது.. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு வந்த மிரட்டல்!
இத்தாலியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு கடத்தல் கும்பல் சைரனை பயன்படுத்தக் கூடாது என மிரட்டல் விடுத்துள்ளது. இத்தாலியில் மாஃபியா கும்பல் போதைக் கடத்தலை செய்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள நேப்பிள்ஸ் பகுதியில் ஆம்புலன்ஸை இயக்கும் போது சைரனை பயன்படுத்த வேண்டாம் என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிரட்டும் தொனியில் கடத்தல் கும்பல் உத்தரவிட்டுள்ளது. இதனைபோல், மிளிரும் விளக்குகளையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஓட்டுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆம்புலன்ஸின் சைரன் ஒலியும், விளக்கின் ஒளியும் தங்களது தொழிலுக்கு இடையூறாக இருப்பதாகவும், போதை வஸ்துகளை கைமாற்றும் போது ஆம்புலன்ஸின் ஒலி மற்றும் ஒளியை பார்த்து போலீஸ் என குழம்பி விடுவதால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. ஆம்புலன்ஸ் ஒலி மற்றும் ஒளி கேட்டு தங்களது வாடிக்கையாளர்கள் அஞ்சி நடுங்குவதால் மாஃபியா கும்பல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்,ஒருபடி மேலாக, சைரனுடன் சென்ற ஆம்புலன்ஸை மடக்கி இனி சைரன் பயன்படுத்தினால் சுடப்படுவீர்கள் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனனர். இந்த விவகாரம் தொடர்பாக இத்தாலி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. உயிரிரை காக்கும் பணியில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது இந்நாட்டில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.