சென்னை டெஸ்ட் இங்கிலாந்துக்கு டாஸ் முதலில் பேட்டிங்
சென்னையில் இன்று தொடங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் அகசர் படேலுக்குக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் விளையாடுகிறார்.இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டி, 5 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னையிலும் அடுத்த 2 டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தன்னுடைய அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் சிப்லி ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை இஷாந்த் சர்மா வீசினார்.இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்குப் பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, கோஹ்லி, ரகானே, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா மற்றும் ஷபாஸ் நதீம் ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், சிப்லி, டேன் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், ஜோஸ் பட்லர், டோம் பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேக் லீச் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் உள்ளனர்.