சென்னை டெஸ்ட் இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள்

சென்னை டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் சிப்லி ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் இஷாந்த் சர்மா மற்றும் பும்ராவின் வேகப் பந்துவீச்சை சமாளித்து நிதானமாக ஆடினர்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின் மற்றும் ஷபாஸ் நதீமை கோஹ்லி கொண்டு வந்தார். இவர்களது பந்து வீச்சையும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருவரும் சிறப்பாக சமாளித்தனர். அவர்களது ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்தின் ரன் எண்ணிக்கை அரைசதத்தை கடந்தது.

இந்நிலையில் 33 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த பர்ன்ஸ் அஷ்வினின் பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 63 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு டேன் லாரன்ஸ் களமிறங்கினார். இவர் வந்த வேகத்திலேயே பும்ராவின் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு கேப்டன் ஜோ ரூட் களமிறங்கினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. சிப்லி 26 ரன்களுடனும், கேப்டன் ஜோ ரூட் 4 ரன்களுடனும் கொண்டிருக்கின்றனர்.

More News >>