ஐபிஎல் போட்டியில் சுனில் நரைன் புதிய சாதனை!
ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை சுனில் நரேன் பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் திங்களன்று ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணியும், டெல்லி டேர் டேவில்ஸ் அணியும் மோதின. அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
அதில், கிறிஸ் மோரிஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் சீசனில் 100 விக்கெட் கைப்பற்றிய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.
இதுவரை சுனில் நரைன் 86 போட்டிகளில் விளையாடி 336 ஓவர்கள் வீசிய, 2113 ரன்கள் விட்டு கொடுத்து 102 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 6 முறை 4 விக்கெட்டுகளையும், ஒரு முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் வெளிநாட்டுப் பந்துவீச்சாளர் மலிங்கா ஆவார். மலிங்கா 110 போட்டிகளில் பங்கேற்று 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெளிநாட்டு வீரர்களில் வேகப்பந்து வீச்சில் மலிங்காவும், சுழலில் சுனில் நரைனும் சாதனை (100 விக்கெட்டுகள்) படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக நூறு விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள்:
லசித் மலிங்கா [154], அமித் மிஸ்ரா [134], பியூஷ் சாவ்லா [130], ஹர்பஜன் சிங் [124], டுவைன் பிராவோ [123], புவனேஷ்குமார் 115, வினய் குமார் [105], ஆசிஷ் நெஹ்ரா [105], ரவிச்சந்திரன் அஸ்வின் 104, ஜாஹிர் கான் [102].
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com