பிகில் நடிகைக்கு காதல் சொன்ன பாய்ஃபிரண்ட்.. நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
நடிகர் விஜய் நடிக்க அட்லி இயக்கிய படம் பிகில். கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தாலும் வர்ஷா பொல்லாம்மா, ரெபா மோனிகா ஜான் எனப் பல இளம் நடிகைகள் சிங்கப் பெண்களாகக் கால்பந்து வீராங்கனை வேடத்தில் நடித்தனர். இவர்களில் ரெபா மோனிகா ஜான் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார், வருடா வருடம் பிறந்த நாள் கொண்டாடினாலும் இந்த பிறந்தநாள் அவர் எதிர்பாராததாகவும் வாழ்வில் மறக்க முடியாத விழாவாகவும் அமைந்துவிட்டது. இதில் அவருக்கு வந்த கிப்ஃட்களை விடப் பெரிய கிஃப்ட் ஒன்றை பாய்ஃபிரண்ட் ஜோமன் ஜோசப் அளித்தார்.
ரொபோ மோனிகாவிடம் பூச்செண்டு கொடுத்த பாய்ஃபிரண்ட் ஜோமன் திடீரென்று ஒரு காலை தரையில் மண்டியிட்டு ஐ ல்வ் யூ சொல்லி தனது காதலை ரெபாவிடம் வெளிப்படுத்தினார். ஜோமன் தந்த இன்ப அதிர்ச்சியில் ஒரு கணம் வாயடைத்துப்போய் நின்ற ரெபாவின் விரலில் மோதிரமும் போட்டார். ரெபா அவரது காதலை ஏற்றுக் கொண்டு திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்.ஜோமன் ஜோசப் தான் காதல் சொன்னதையும் அதைக் காதலி ரெபா வெட்கத்துடன் ஏற்றுக் கொண்டதையும் படங்களாகப் பகிர்ந்திருக்கிறார். அது நெட்டில் வைரலாகி வருகிறது.
கொரோனா லாக்டவுனால் இருவரும் சில மாதங்களாக ஜோமன் நேரில் சந்திக்க முடியாமலிருந்தார். அந்த இடைவெளி அவருக்குள் எப்போது ரெபாவை சந்திப்பது என்ற ஏக்கத்தை ஜோமனுக்கு ஏற்படுத்தியது அதுவே மெல்லக் காதலாக மாறியது. பிறந்த நாளில் வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அதை காதலை சொல்ல தகுந்த நேரமாக ஜோமன் பயன்படுத்திக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.ஆனாலும் ஏற்கனவே இவர்கள் இருவரும் துபாயில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.இளம் ரெபா மோனிகா ஜான் 2016 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான 'ஜேக்கபின்ட் ஸ்வர்கராஜியம்' மூலம் அறிமுகமானார்.
மேலும் தமிழில் 'ஜருகண்டி', 'பிகில்' மற்றும் 'தனுசு ராசி நேயர்களே' ஆகிய படக்களில் நடித்திருக்கிறார்.கொரோனா கால தளர்வில் நடக்கவிருக்கும் மற்றொரு நடிகையின் திருமணமாக ரெபா திருமணம் அமைய உள்ளது. காஜல் அகர்வால், பிராச்சி தெஹலான் நிஹாரிகா, மியா ஜார்ஜ் போன்ற சில நடிகைகளின் திருமணம் கொரோனா கால தளர்வில் கடந்த ஆண்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.