டபுள் ஆக்ஷனில் கணவரை திணறடித்த காஜல்..
ஒரே மாதிரி இரண்டு பேர் என்பது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சத்தியம் தான். வட நாட்டில் ஒரு கிராமமே இரட்டையர்களாக இருக்கும் தகவல்கள் நெட்டில் உலா வருகின்றன. ஒரு காதலிபோல் இரண்டு பேர் இருந்தால் அதில் அசல் எது. போலி எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லாக்டவுன் தளர்வில் குடும்பத்தினர் சம்மதத்துடன் தனது பாய்ஃபிரண்டு தொழில் அதிபர் கவுதம் கிட்லுவை நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் மாலத் தீவுக்கு தேனிலவு சென்று ஒரு மாதம் பொழுதை ஜாலியாக கழித்தனர்.
பிறகு ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்க காஜல் திரும்பி வந்தார். கைவசம் இருந்த படங்கள் முடிந்த பின் மீண்டும் கணவர் கவுதம் உடன் வெளிநாட்டு டூர் புறப்பட்டுவிட்டார் காஜல்.இதற்கிடையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த ருசிகர சம்பவம் பற்றி தற்போது பகிர்ந்தார். சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு ஒரு மெழுகு சிலை இருக்கிறது. தத்ரூப்பாக காஜல் போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அந்த அருங்காட்சியகத்திலிருந்து வந்த சிலை அமைப்புக் குழு காஜலின் உடல் அளவுகளையும் கண், இமை உள்ளிட்ட எல்லா பாகங்களையும் துல்லியமாக அளவெடுத்து பதிவு செய்து கொண்டு இந்த மெழுகு சிலை அமைக்கப்பட்டது.
கவுதம் உடன் காஜல் அந்த அருங்காட்சியகத்துக்குச் சென்ற காஜல் தனது மெழுகு சிலையை காட்டினார். மெழுகு சிலைக்கு எப்படி போஸ் தந்தாரோ அதேபோல் மெழுகு சிலை அருகில் நின்று காஜல் அகர்வால் போஸ் தந்ததும் எது அசல் எது போலி என்று கண்டுபிடிப்பதில் ஒரு நிமிடம் தடுமாறினார் கவுதம் . இரண்டு காஜலுக்கும் நடுவில் நின்றபடி யார் நிஜம் யார் போலி என்று ரசிகர்களைக் கேட்டார்.இதுகுறித்து காஜல் கூறும் போது, 'ஒரு வருடத்திற்கு முன்பு எனது மெழுகு சிலை திறப்புக்காக நான் சிங்கப்பூர் சென்றேன். சிலையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு கவுதம் கிட்லுவுக்கு அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கொரோனா தொற்று எல்லோர் வாழ்க்கையையும் மாற்றிப் போடும் என்று யார் எண்ணிப் பார்த்தார்கள். அந்த கடினமான தருணத்திலும் கவுதம் கிட்ச்லுவின் காதல் முழுவதும் என் மீது மட்டுமே இருந்தது. அதுதான் என்னைக் கவர்ந்தது என்றார்.காஜல் தற்போது தனது ஹாட் ஸ்டார் வலைத் தொடரான 'லைவ் டெலி காஸ்ட்' மற்றும் விஷ்ணுவின் 'மொசகல்லு' வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.
திருமணத்து முன் நடிகைகள் அசின், ஜெனிலியா, நஸ்ரியா நாசிம், பாவனா, நவ்யா நாயர், ஸ்ரேயா. எமி ஜாக்ஸன். சமந்தா, பிரியாமணி என சில ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வந்தனர். ஆனால் திருமணம் முடிந்தவுடன் அவர்களிடம் கால்ஷீட்டுக்காக சுற்றி வந்த தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டனர். இவர்களில் அசின், நஸ்ரியா போன்றவர்கள் கவுரவமாக நடிப்பிலிருந்து விலகி இருந்தாலும் மற்றவர்கள் வாய்ப்பு வந்தால் நடிக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த பட்டியலில் சமீபத்தில் கடந்த ஆண்டு இணைந்தார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு முன்பு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் வெப் சீரிஸ்களில் நடிக்கிறார்.