பேனருடன் நடிகரை பார்க்க 140 கி மீட்டர் நடந்து வந்த ரசிகர்..
கோலிவுட், டோலிவுட், சேண்டல்வுட்டில் ஹீரோக்களுக்கு ரசிகர்கள் லட்சக் கணக்கில் உள்ளனர். கொடி கட்டுவது. பிறந்த நாள் கொண்டாடுவது முதல் நாள் முதல் காட்டி பார்பது, நற்பணிகள் செய்வது என்று தனக்குப் பிடித்த ஹீரோக்களுக்காக ரசிகர்கள் மெனக்கெடுகின்றனர்.சினிமா மோகம் குறைந்தால் ஹீரோக்களுக்கான ரசிகர்கள் மோகமும் குறைந்துவிடும் என்பார்கள். ஆனால் கொரோனா காலகட்ட லாக் டவுன் ஒரு வருடம் வரையில் படங்கள் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் இன்னும் தீவிரமாக ஹீரோக்களை காண முயல்கின்றனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்துக்குத் தீவிர ரசிகர்களில் இருக்கிறார்கள். அவர்களுக்காக எந்த களத்தில் இறங்கவும் தயாராக இருக்கிறார்கள். அன்பு காட்டும் ரசிகர்களை ஹீரோக்களும் அன்பு காட்டி கவர்கின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் பார்ப்பதற்காக அவரது ரசிகர் ஒருவர் பல நூறு கி. மீட்டர் தூரம் நடந்து வந்தார். இதையறிந்த அல்லு அந்த ரசிகரை தனது வீட்டிற்கு வரவழைத்துப் பேசினார். சில அறிவுரைகளையும் அல்லு அவருக்கு வழங்கினார்.
தற்போது மற்றொரு ரசிகர் தனக்குப் பிடித்த ஹீரோவை பார்க்க வந்திருக்கிறார். டோலிவிட் நடிகர் வெங்கடேஷை பார்க்க அவரது ரசிகர் ஸ்ரீனிவாஸ் என்பவர் கையில் பேனர் ஏந்தியபடி ஐதராபாத் வந்தார். சுமார் 140 கி மீட்டர் ஸ்ரீனிவாஸ். வெங்கடேஷின் அன்னபூரணா ஸ்டுடிவுக்கு சென்றார். அவர் வந்தபோது நடிகர் ஊரில் இல்லாததால் வருத்தம் அடைந்தார். பின்னர் பேட்டி அளித்தார். அவர் கூறும் போது, நான் என்னுடைய 7 வயதிலிருந்தே வெங்கடேஷ் சாரின் ரசிகன். அவருடைய பிறந்த நாளை வருடா வருடம் சிறப்பாக கொண்டாடுவேன் என்றார். வெங்கடேஷ் மேனேஜர்கள் அவர் வந்ததும் ரசிகரை நேரில் அழைத்து சந்திக்க வைப்பதாகத் தெரிவித்தனர்.