சசிகலா வருகை கிடுக்கிப்பிடி கேள்விகள்: திணறிய அமைச்சர்கள்

சசிகலா எட்டாம் தேதி தமிழகம் வர இருக்கிறார் இந்த தகவலை அதிமுகவினரிடையே வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது அவர் கட்சியிலேயே இல்லை உறுப்பினர் கூட கிடையாது என்றெல்லாம் வெளியில் சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்கு உத்தரவையும் இருக்கத்தான் செய்கிறது இதை நிரூபிக்கும் சம்பவம் ஒன்று இன்று நடந்தது.சசிகலா சென்னை வரும்போது அவரை வரவேற்க நான்கு இடங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்ட அமமுகவினர் அதற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு அளித்திருந்தனர்.அதே நேரம் அமைச்சர்கள் சிவி சண்முகம் ஜெயக்குமார் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் டிஜிபியிடம் சசிகலாவும் தினகரனும் தமிழகத்தில் பிரச்சினையை ஏற்படுத்துவார்கள் மனித வெடிகுண்டாக மாறி வழிநின்று தினகரனின் ஆதரவாளர் மிரட்டல் விடுத்திருக்கிறார் எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார்கள்.

பின்னர் மூவரும் அணிந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஏன் தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம் என்று நொந்து கொண்ட அந்த அளவிற்கு இருந்தது இந்த செய்தியாளர் சந்திப்பு நீங்கள் வரை அமைச்சர் நீங்களே எதற்குப் போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று சொன்னால் போதாதா என்று ஒரு நிருபர் கேட்க நான் யாராக இருந்தாலும் ஒரு விஷயத்தை முறைப்படிதான் செய்ய வேண்டும் அது ஜனாதிபதி ஆர்மன்ஜகி பிரதமராக இருந்தாலும் சரி சாதாரண தொண்டனாக இருந்தாலும் சரி இந்த அடிப்படையில்தான் நாங்கள் செய்கிறோம் சசிகலா ஊழல் செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர் என்று சகட்டுமேனிக்கு சசிகலாவை சாட..ஒரு செய்தியாளர் சசிகலா தண்டனை பெற்ற அதே வழக்கில்தான் ஜெயலலிதாவும் தண்டனை பெற்றார்.

அப்போ அவங்களும் ஊழல் செய்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? என்று ஒரு செய்தியாளர் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்க அதிர்ந்து போன அமைச்சர்கள் அங்கிருந்து அகல மதுசூதனன் மட்டும் அந்த செய்தியாளரைப் பார்த்து, செத்தவர்களைப் பத்தி சொல்றியா பா? நாளைக்கு நீ செத்தா கூட உன்னைப் பத்தி பேசுவாங்க..என்று சொல்ல செய்தியாளர் விடவில்லை நீங்கள் சொல்லும் அதே குற்றச்சாட்டில் தான் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு இருக்கிறார் அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று சொல்லப் பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக நகர்ந்து விட்டனர்.

More News >>