ஹாலிவுட்டில் நடிக்க அமெரிக்கா பறக்கும் தனுஷ்..

பட்டாஸ் படத்துக்குப் பிறகு நடிகர் தனுஷ் வரிசையாகப் படு பிஸியாக படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஜகமே தந்திரம் முடிந்த ரிலீஸுக்கு தயாராக உள்ளது, கொரோனா கால ஊரடங்கால் தள்ளிப் போன ரிலீஸ் பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் மட்டுமே வெளியானது. 50 சதவீத டிக்கெட் அனுமதியால் பட ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில் திடீரென்று ஒடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளது, நெட்பிளிக்ஸ் இப்படத்தை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியானது.

இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தனுஷ், பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இருவருமே படம் தியேட்டரில்தான் வெளியாகும் என்று கூறி வந்த நிலையில் இது அவர்களுக்கு ஷாக் ஏற்படுத்தியதில் வியப்பில்லை. எல்லோரும் விரும்புவதுபோல் ஜகமே தந்திரம் தியேட்டரில் வெளியாகும் என நம்புவதாக தனுஷ் சமீபத்தில் டிவிட்டரில் மெசேஜ் வெளியிட்டார். இதுபற்றிய ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை. மேலும் தனுஷ் ரசிகர்களும் ஜகமே தந்திரம் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் ஒடிடியில் வெளியிட வேண்டாம் என்று ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர்.

இதற்கிடையில் ஜனவரி ஆரம்பத்தில் 'டி 43' என்ற தற்காலிக பெயருடன் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அடுத்த இரண்டு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தனுஷ் தனது ஹாலிவுட் படப் படப்பிடிப்பில் பங்கேற்க அமெரிக்காவிற்குப் பறக்க உள்ளார்.ஹாலிவுட் தயாரிப்பாளர் இரட்டையர்கள் அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ ஆகியோர் தயாரிக்க ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் நடிக்கும் 'தி கிரே மேன்' படத்தில் நடிப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் தனுஷ் கூறியிருந்தார். தனுஷின் கதாபாத்திரம் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப் பிடிப்புக்காக அமெரிக்காவுக்குப் பறக்கவுள்ளார் தனுஷ். அங்கு 2 மாதங்கள் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

தி கிரே மேன் என்பது மார்க் கிரீனி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு அதிரடி திரில்லர். இதில் வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ஜெசிகா ஹென்விக் ஆகியோரும் நடிக்கின்றனர்.தனுஷ் ஏற்கனவே கென் ஸ்காட் இயக்கிய பிரெஞ்சு சாகச நகைச்சுவை திரைப் படமான தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர் படத்தில் நடித்திருந்தார். ரோமெய்ன் புவேர் டோலஸின் நாவலை அடிப்படையாகக் கொண்ட தி எக்ஸ்டாரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கீர் ஆங்கிலம், பிரெஞ், தமிழ், தெலுங்கு. மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.ஹூ காட் ட்ராப் இன் இகேயா வார்ட்ரோப் மற்றும் படம் ஆங்கிலம், பிரஞ்சு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஆறு வெவ்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

More News >>