மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயமாக உருவான பின்னணி!
தமிழகத்தில் மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 2 இடங்களை புலிகள் சரணாலயமாக உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 1973-ம் ஆண்டு புலிகளின் பாதுகாப்பிற்காக ஆரம்பிக்கப்பட்ட புலிகள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகியவை இடங்கும். புலிகளை வேட்டையாடுவதைத் தடுக்கவும், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே புலிகள் காப்பகத்தின் முக்கிய நோக்கம்.
இதற்கிடையே, தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வன உயிர் காப்பகமும், மதுரை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் காப்பகமும் புலிகள் காப்பகமாக மாற்ற கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பகுதிகளில் புலிகளின் கால் தடங்கள், டிஎன்ஏ மாதிரிகள் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு 2017 - 2018-ம் ஆண்டுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்தப் பகுதிகளில் 14 புலிகள் இருப்பது தெரிய வந்தது. அதில் மூன்று ஆண் புலிகள், 11 பெண் புலிகள் என கண்டறியப்பட்டது. இந்தத் தகவல்கள் மத்திய அரசுக்கு அனுப்பட்டது.
இதனை பரீசிலித்த மத்திய அரசு, தற்போது, மேகமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரு இடங்களை புலிகள் சரணாலயமாக உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தேசியப் புலிகள் பாதுகாப்பு கழகமும் அனுமதியளித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் புலிகள் சரணலாயத்தின் எண்ணிக்கை 51 ஆகவும், தமிழகத்தில் 6 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஒரு காட்டுயிர் சரணலாயத்தை புலிகள் காப்பாகமாக மாற்றும்போது விலங்குகள் உணவு குறித்து கணக்கில் கொள்ள வேண்டும். எனவே, அதாவது ஏராளமான காட்டு மாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் இந்த சரணாலயத்தில் இருப்பதால் புலிகளின் உணவு தேவையும் ஈடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.