தேசிய விருது குயினுக்கு சமூக வலைத்தளம் என்றாலே அலர்ஜியாம்..

பேஸ்-புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், யூ-ட்யூப் என்று சமூக வலைத்தளங்கள் செயலிகள் தற்போது அன்றாடம் நாம் பயன்படுத்தும் முக்கிய அங்கமாகி விட்டன. டீன்-ஏஜ் முதல் பெரியவர்கள் வரை சதாகாலமும் அதிலேயே மூழ்கி கிடக்கிறார்கள்.

இதில் நடிகர் நடிகைகளும் அடங்குவர், தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய தகவல்களையும் சமூக விஷயங்கள் குறித்த கருத்துகளையும் உடனுக்குடன் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள்.

இந்தி நடிகை கங்கனா ரணாவத்து மட்டும் இதில் சற்று வித்தியாசமாக உள்ளார். அவருக்கு சமூக வலைத்தளங்கள் என்றாலே அலர்ஜியாம். இது போன்ற விஷயங்களில் இருந்து சற்று தள்ளியே இருக்கிறாராம்.

கங்கனா ரணாவத் கூறியதாவது:-

“மற்ற நடிகர்-நடிகைகளைப்போல் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் எனக்கு ஆர்வம் இல்லை. நமது நேரம் இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது விரயம் ஆகிறது. அதில் செலவிடும் நேரத்தை வேறு நல்ல விஷயங்களுக்கு செலவிடலாம். என்னை சார்ந்தோர் நிறைய பேர் சமூக வலைத்தளத்தில் ஒரு பக்கம் வைத்துக்கொள்ளுங்கள் என்று என்னிடம் வற்புறுத்தினர். ஆனால் அதை நான் ஏற்கவில்லை.

விளம்பர தூதுவராக நான் இருக்கும் ஒரு சில நிறுவனங்கள் கூட என்னை சமூக வலைத்தளத்தில் இணைய வற்புறுத்தினர். அப்படி இருந்தால் அவர்களின் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்ல சுலபமாக இருக்கும் என்றனர். அதற்கும் என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

இன்னும் சிலர் நீங்கள் இணைந்தால் மட்டும் போதும். நாங்கள் உங்களை பற்றிய செய்திகளை பதிவிடுகிறோம் என்றனர். என் பெயரில் அப்படி ஒரு மோசடி நடப்பதை நான் விரும்பாததால் அதற்கும் சம்மதிக்கவில்லை.” என்றார் கங்கனா.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>