மோடியுடன் இருந்த புகைப்படம் தனக்கு பிடித்தமான புகைப்படம்: பியர் கிரில்ஸ் டுவிட்!
பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்த புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களுள் ஒன்று என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார். டிஸ்கவரி தொலைக்காட்சியில் மனிதனும் காடும் (மேன் வெர்சஸ் வைல்டு) என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. சுமார் 180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அடர்ந்த காடுகளில், வனவிலங்குகளை அதன் இருப்பிடத்திற்கே சென்று பின்தொடரும் இந்த நிகழ்ச்சியானது அனைவராலும் மிகவும் விரும்பி பார்க்கப்படும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்.
இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிலையில், மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, மிகவும் குளிரான சீதோஷ்ண நிலையில் பிரதமர் மோடியுடன் தேநீர் அருந்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம், தனக்கு பிடித்தமான புகைப்படங்களுள் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.