பூஜா ஹெக்டே வாய்ப்பை பறிக்கும் பிரபல நடிகை..
தமிழ் முதல் இந்தி படங்கள் வரை தற்போது பெரிய ஹீரோக்களின் பார்வை மாறி வருகிறது. பான் இந்தியா படத்தில் நடிப்பதற்கு விரும்புகின்றனர். பிரபாஸ் நடித்த பாகுபலி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. எல்லா இடங்களில் வசூலை குவித்ததுடன் வெளிநாடுகளிலும் அப்படத்துக்கு வசூல் குவிந்தது. இப்படம் ஒரு வழிகாட்டிபோல் அமைந்த நிலையில் யஷ் நடித்த கே ஜி எஃப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி எல்லா இடங்களிலும் வசூலை அள்ளியது. அடுத்து யஷ் நடிக்கும் கே ஜி எஃப் 2 படத்தையும் பான் இந்தியா படமாக தயாரிக்கின்றனர்.
அதேபோல் தமிழில் மொழியில் மட்டுமே உருவான மாஸ்டர் படம் பிறகு பான் இந்தியா படமாகி வெளியனது. இப்படம் 200 கோடி வசூல் செய்து ஹிட்டானது. அடுத்த நெல்சன் திப் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தை இயக்கி உள்ளார். விஜய் 65 படத்தை இயக்கும் திலீப் அதில் ஹீரோயினாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் கால்ஷீட் கேட்டிருந்தார். அதில் சரியான முடிவு ஏற்படாத நிலையில் அவருக்கு பதிலாக ராஷ்மிகா மந்தன்னாவை தேர்வு செய்திருக்கின்றனர்.
மற்றொரு தகவலும் இத்துடன் சேர்ந்து பரவுகிறது. கதைக்கு இரண்டு ஹீரோயின்கள் தேவைபடும் சூழல் உருவாகி இருக்கிறா. எனவே விஜய்யுடன் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா இரண்டு ஹீரோயின்களும் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ராஷ்மிகா விரைவில் வெளியாகவிருக்கும் கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். பூஜா ஹெக்டே ஏற்கனவே முகமூடி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புஜா ஹெக்டே அல வைகுந்த புரமோலு படம் மூலம் புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடி புகழ் பெற்றார். தற்போது பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். இதுதவிர இந்தியிலும் நடித்து வருகிறார்.