விஜய் சேதுபதி-லோகேஷ் மீண்டும் இணைகின்றனர்..

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் இயக்கும் வாய்ப்புபெற்றார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று கூறப்பட்ட போது பலர் நம்ப மறுத்தனர். பிறகு பட நிறுவனம் அதனை உறுதி செய்து தகவல் வெளியிட்டது. பவானி என்ற லாரி உரிமையாளர் வேடத்தில் நடித்தார், விஜய்க்கு படத்தில் எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டதோ அதே அளவுக்கு விஜய்சேதுபதி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

விஜய் சேதுபதியும் லோகேஷ் கனகராஜும் ஏற்கனவே நல்ல நண்பர்கள். இதனால் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டார்.மாஸ்டர் படம் கடந்த ஜனவரி 13ம் தேதி மாதம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டானது. வெளியான சில நாட்களில் இப்படம் ரூ 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. பின்னர் இப்படம் ஒடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது. அடுத்து புதிய தகவல் என்னவென்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இது பட்ஜெட் படமாக உருவாக உள்ளது. குறுகிய காலத்தில் இப்படம் உருவாகிறது. மாஸ்டர் படத்தில் கொடூர வில்லனாக நடித்த விஜய் சேதுபதி லோ கேஷுடன் இணையும் புதிய படத்தில் நவரச நடிப்பை வெளியிடும் மென்மையான பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதன் முழு விவரம் இருதரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வெளியாக உள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு கமலின் தேர்தல் பிரசாரம் அவருக்குக் காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் தாமதமாகி வருகிறது. விஜய் சேதுபதியும் லாபம், துக்ளக் தர்பார் மற்றும் இந்தி தெலுங்கு மொழிப் படங்கள் என அரை டஜன் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

More News >>