தமன்னா ஒர்க் அவுட் நெட்டில் வைரல்..
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கில் மும்பையில் வீட்டிலிருந்த நிலையிலும் தினமும் உடற் பயிற்சி செய்தும், கொரோனா ஊரடங்கு தளர்வில் மலையேற்ற பயிற்சிக்கும் சென்றார். பிறகு வெப் தொடர் படப் பிடிப்பிலிருந்து அழைப்பு வரவே ஐதராபாத் வந்தார். ஷூட்டிங் செல்வதற்கு முன் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதியாகி சில நாட்கள் சிகிச்சை பெற்று அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகித் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்து சிகிச்சை பெற்றார். சில நாட்களில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்ததையடுத்து வீடு திரும்பினார். சில நாட்கள் ஓய்வு எடுத்தவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.இந்நிலையில் படப்பிடிப்பிலிருந்த தமன்னாவை நடிகை சமந்தா நேரில் சந்தித்துத் தான் நடத்தும் ஒடிடி தள ஷோவுக்கு அழைப்புவிடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட தமன்னா ஷோவில் கலந்துகொண்டார். அவரிடம் நீங்கள் படங்களில் முத்தம் தந்து நடிப்பதில்லை உங்களுடைய இந்த பாலிசியை தளர்த்தினால் எந்த நடிகருக்கு முத்தம் தருவீர்கள் என்றதும் உடனடியாக, விஜய் தேவரகொண்டாவுக்கு முத்தம் தருவேன் என்றார்.
பின்னர் ஐதராபாத்தில் நடத்தப் படப்பிடிப்பு முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பித் தொடர் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தனது ஒர்க் அவுட் படங்கள், வீடியோவை வெளியிட்டு மீண்டும் கொரோனாவுக்கு முந்தைய உடல் தோற்றத்தை மீட்டெடுத்தாக தெரிவித்தார். தற்போது மற்றொரு ஒர்க் அவுட் படத்தை தமன்னா வெளியிட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். அதில்,அறிவு என்ன சொல்கிறதோ அதைச் சாதிக்கும் உடல் தகுதி திரும்பி விட்டது. மெதுவாக தொடர்ச்சியான பயிற்சி இதைச் சாத்தியமாக்கியது. தொடர்ச்சியாக இது செல்கிறது. ஒர்க் அவுட் டுக்கு பிறகு பிரகாசமான தோற்றம் பெற்றிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.