இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது: புதுவை முதல்வர் ஆவேசம்
தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற ரீதியில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார் மோடி எனப் புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். பாண்டிச்சேரி முதல்வர் நாரணயனசாமி திருவாரூரில் திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடி கடந்த ஆறு ஆண்டுகளில் எந்த பத்திரிகையாளரையாவது சந்தித்து நேரடியாகப் பேட்டி கொடுத்திருக்கிறாரா.? பிரதமரை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற சர்வாதிகார ஆட்சிதான் தற்போது நடந்து வருகிறது.
யார் போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றிக் கவலைப்படக் கூடாது என்பதுதான் நரேந்திர மோடி அரசின் திடமான கொள்கையாக இருந்து வருகிறது.மின்சாரம், இன்சூரன்ஸ், விமானத்துறை, பாரத் பெட்ரோலியம், நிலக்கரி சுரங்கம், வங்கிகள், பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்தையும் தனியார் மயமாக்கி வருகிறார்கள்.இப்படி எல்லாவற்றையும் விற்று விட்டு அரசாங்கத்தை எப்படி நடத்த முடியும் எனக் கேள்வி எழுப்பினார். தேர்தல் அறிவித்த பின் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும்.