பட்டாசு வெடித்து வரவேற்பு : பஸ்பமானது கார்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சசிகலா வரவேற்பில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, சாலையில் அவரது காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கார்களில் மீது பட்டாசு விழுந்தது. இதில் இரண்டு கார்கள் எரிந்து நாசமானது.4ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று 100க்கும் மேற்பட்ட கார்களுடன் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார். வழிநெடுகிலும் அவருக்கு அமமுகவினர் ஆங்காங்கே நின்று வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சசிகலா வந்த கார் கார் கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி டோல்கோட் அருகே வந்தபோது அமமுகவினர் அவரை வரவேற்க பட்டாசு வெடித்தனர். ஏராளமான பட்டாசுகள் வெடித்து சிதறியதால், சசிகலா வந்த காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது பட்டாசு சிதறல்கள் விழுந்தது. இதில் 2 கார்கள் கார்கள் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. பிறகு இந்த விபத்தால் யாருக்கும் எந்த சேதமும் இல்லை என்பதால் அந்த பகுதி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது.
சசிகலா வருகையின்போது, பட்டாசு வெடிப்பதற்கும் பேண்டு வாத்தியங்கள் இசைப்பதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை என்பது உள்பட ஏராளமான கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருந்தனர் ஆனால் அவற்றைத் துளியும் கண்டுகொள்ளாமல் தொண்டர்கள் தங்கள் இஷ்டத்திற்குப் பட்டாசுகளை வெடித்தும் ஆடிப் பாடியும் சசிகலாவை வரவேற்றனர்.இந்த நிலையில், ச வரும் வாகனத்தின் பின்பு ஐந்து வாகனங்கள் மட்டுமே பின் தொடர்ந்து வரலாம் என்று உத்தர விட்டனர் ஆனால் சிறிது நேரத்தில் அந்த உத்தரவும் காற்றில் கரைந்து போனது.