சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து காலியாக உள்ள Assistant Programmer பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 15.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 46
கல்வி தகுதி: விண்ணப்பதாரர் இளங்கலை அறிவியல் அல்லது புள்ளியியல் அல்லது பொருளியல் அல்லது வணிகவியல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அவர்களின் பள்ளிப்படிப்பை 10/+2/+3 என்ற முறையிலேயே படித்திருக்க வேண்டும்.
தொழில்நுட்ப தகுதி: கணினி பயன்பாடு பிரிவில் முதுகலை டிப்ளமோ கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி சார்ந்த பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: Pay Level-13: Rs.35900-113500
வயது: 18 முதல் 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.1000 .
பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகுப்பிலும் உள்ள விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இணையத்தின் மூலம் 15.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2021/02/no_17_2021.pdf