பிப்ரவரி 15ம் தேதி அறிமுகம்: சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் எவை?
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன், இந்தியாவில் பிப்ரவரி 15ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கென ஃபிளிப்கார்ட் பிரத்தியேக பக்கத்தை ஒதுக்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
தொடுதிரை: 6.7 அங்குலம்; சூப்பர் AMOLEDஇயக்கவேகம்: 6 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபிபிராசஸர்: ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 9825 SoCஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனில் முன்புற செல்ஃபி காமிரா, மேற்புறம் மையத்தில் ஹோல்-பஞ்ச் கட் அவுட்டில் அமைந்திருக்கும் என்றும் பின்புறம் குவாட் காமிரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.