உடல் பருமனாக இருந்தால் சர்க்கரை நோய் வருமா?? வாங்க பார்க்கலாம்..

சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை உடல் பருமனால் அவதி படுகின்றனர். இதனின் விளைவாக இதய நோய்,புற்று நோய்,சர்க்கரை நோய் ஆகியவை உண்டாகிறது. 2019 ஆம் ஆண்டு கணக்கின்படி 27 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியவர்கள் மட்டும் இல்லாமல் 6 மாத குழந்தை கூட சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் தற்போது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. இதனை எப்படி கட்டுபடுத்துதல் பற்றி சில குறிப்புககளை பார்க்கலாம்.

சர்க்கரை நோய் ஆபத்தானது:-நீரிழிவு நோயால் பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக நோய் என பல விதமான நோய்கள் வரிசை கட்டி நிற்கும். இதனை ஒழிக்க ஒரே வழி உடல் எடையை சீராக வைத்து கொள்வது மட்டுமே.

உடல் பருமனுக்கும் சர்க்கரை நோய்க்கும் உள்ள சம்மந்தம்:-இன்சுலின் அளவையும் பசியையும் கட்டுப்படுத்தும் உடலில் உள்ள கொழுப்புக்கும் ஹார்மோன்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதால் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் பொழுது சர்க்கரை நோயும் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் எடையை 5-10%வரை குறைத்தால் சர்க்கரை நோய் நம்மை விட்டு சென்று விடும் என்பதை வல்லுனர்கள் ஆராய்ச்சியில் நிருபித்துள்ளனர்.

உடல் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்:-உடல் குறைவதால் இதய பிரச்சனை எதுவும் வராமல் தடுகின்றது.வாய்வு உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைவதால் உடல் ஆரோக்கியமாக விளங்கும். முக்கியமாக இன்சுலின் அளவை சீராக உதவுகிறது. இதனால், உடல் எடையை குறைத்தால் சர்க்கரை நோயால் வரும் அபத்து நம்மை நெருங்கவே தயங்கும்.

More News >>