ராக்கெட் வேகத்தில் முதல் கட்ட ஷூட்டிங் முடித்த ஹீரோ..
சில ஹீரோக்கள் தங்களின் படங்களை முடிக்க வருடக் கணக்கில் நாட்களை நகர்த்துகின்றனர். பிரபாஸ் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை முடிக்க 4 ஆண்டுகள் ஆனது. அடுத்து அவர் ஏற்று நடிக்கும் படங்களுக்கு வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. இது அவரது ரசிகர்களைச் சோர்வில் ஆழ்த்துகிறது. இந்த இடைக்காலத்தில் சினிமாவுலகில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. சினிமாவில் வெற்றிதான் இலக்கு. சக நடிகர்கள் பலரும் வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்து ஒன்று வெற்றி என்றாலும் அடுத்த 5 வருடங்களுக்கு அதை வைத்துக் காய் நகர்த்துகின்றனர்.
பாகுபலி படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். அது அவருக்கு எதிர்பார்த்த வெற்றி அளிக்கவில்லை. அடுத்த வெற்றிப் படம் தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதும் அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு வருடக்கணக்கில் நடந்துகொண்டிருக்கிறது. இது அவரது மார்கெட் விஷயத்தை மட்டுமல்ல ரசிகர்கள் இருப்பையும் கேள்விக்குறியாக்குகிறது. ராதே ஷ்யாம், ஆதி புருஷ் படங்களில் நடித்தாலும் அதன் படப்பிடிப்பு வருட கணக்கில் நடத்த வேண்டி உள்ளது. இதைச் சமீபத்தில் உணர்ந்து கொண்ட பிரபாஸ் ரசிகர்களைத் தக்கவைக்கவும், வெற்றி ஹீரோ என்ற பெயரைத் தக்க வைக்கவும் விரைந்து ஒரு படம் நடிக்க முடிவு செய்தார். அதற்காக கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீலிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
சில மாதங்களில் படப்பிடிப்பை முடிக்கலாம் என்ற முடிவோடு இவர்கள் சலார் படத்தைத் தொடங்கினார்கள். படப் பூஜையும் படப்பிடிப்பும் ஒரே நாளில் தொடங்கியது. தெலங்கானா நிலக்கரி சுரங்க பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. பிரபாஸின் முக்கிய காட்சிகள் படமானது. இப்படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசனும் இணைந்தார். படப்பிடிப்பு கடினமான காட்சிகளாக இருந்தாலும் ராக்கெட் வேகத்தில் நடந்தது நேற்றுடன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தது.இதில் விஷேசம் என்னவென்றால் பிரபாஸ் படமும், இயக்குனர் பிரசாந்த் நீலும் தங்கள் படப்பிடிப்பை வருடக்கணக்கில் நடத்துபவர்கள். ஆனால் இருவருமே தற்போது ராக்கெட் வேகத்தில் செயல்பட்டு சலார் பட முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். விரைந்து இன்னும் ஒரூரி மாதத்தில் படத்தை முடித்து வெளியிட உள்ளனர்.
ஏற்கனவே ராதே ஷ்யாம் படத்தை முடித்த பிரபாஸ் தற்போது ஒரே நேரத்தில் சலார், ஆதிபுருஷ் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு நாக் அஸ்வின் இயக்கும் சைன்ஸ் பிக்ஷன் த்ரில்லர். கதையில் நடிக்க உள்ளார் பிரபாஸ். தற்போது இவர் நடிக்கும் எல்லா படங்களுமே பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. தமிழ். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.