கனிமொழி குறித்து அவதூறான ட்வீட்: ஹெச்.ராஜாவுக்கு தமிழிசை கண்டனம்

கனிமொழி குறித்து எச்.ராஜா பதிவு செய்திருந்த அவதூறான ட்வீட்டுக்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க நேற்று செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, ஒரு பெண் பத்திரிகையாளரின் அனுமதியின்றி அவரது கன்னத்தில் தட்டி கொடுத்துளார் ஆளுநர்.

இதற்கு அந்த பத்திரிகையாளர் ஆளுநரை விமர்சித்தார். இதை சம்பந்தப்படுத்தி பாஜக-வின் தேசியத் தலைவர் எச்.ராஜா, ` தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள்.

சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே’ என்று திமுக-வின் எம்.பி., கனிமொழி குறித்து அவதூறான ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக-வின் மாநிலத் தலைவர் தமிழிசை, ` பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது’ என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>