பேஸ்புக் நண்பரை சந்திக்க வந்தவருக்கு கோடீஸ்வரன் பட்டம்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
பேஸ்புக் நண்பரை சந்திக்க வந்தவருக்கு கோடீஸ்வரன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் புத்தலத்தானி பரவன்னூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பேஸ்புக் மூலம் பலரிடம் பழகி வந்துள்ளார். அந்த வகையில், பிரபாகரனுக்கு கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சோகன் ஹல்ராம் என்பவர் நண்பனாக கிடைத்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகிய நிலையில், நட்பு காரணமாகத் தனது ஊருக்கு வருமாறு சோகனை பிரபாகரன் அழைத்துள்ளார்.
நண்பனின் அழைப்பை ஏற்று சோகன் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் வந்து நண்பன் பிரபாகரனின் வீட்டில் தங்கியுள்ளார். தொடர்ந்து, இரு குடும்பத்தினரும் கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றலா தலங்களுக்கு சென்று மகிழ்வித்துள்ளனர். அப்போது இருவரும் தாங்கள் செய்து வரும் தொழில் குறித்து மனம் விட்டுப் பேசினர். எதிர்காலத்தில் தொழிலை எப்படி எல்லாம் கொண்டு செல்லலாம் எனவும் பேசினார்கள்.
அப்போது பிரபாகரன் தனது லாட்டரி ஏஜென்சி தொழில் குறித்து சோகனிடம் எடுத்துரைத்துள்ளார். இதனையடுத்து, சோகன், நண்பன் பிரபாகரன் மூலமாக ரூ.5 க்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கக்கூடிய லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
தொடர்ந்து, கேரளாவில் இருந்து சொந்த ஊரான கர்நாடாவிற்கு குடும்பத்தினருடன் சோகன் சென்றுள்ளார்.
இதற்கிடையே, சோகன் வாங்கிய ரூ.5 லாட்டுச்சீட்டுக்கு ரூ.1 கோடி விழுந்துள்ளது. இந்த தகவலை சோகனுக்கு பிரபாகரன் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதனை நம்பாத சோகன், சற்று நேரத்தில் சொர்க்கத்திற்கு சென்று வந்து விட்டார். உடனே அவர்களைத் திரும்ப வருமாறு பிரபாகரன் அழைத்த நிலையில், சோகன் குடும்பத்தினர் பிரபாகரனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பேஸ்புக் நட்பு மூலம் கோடீஸ்வராக ஒருவர் மாறியுள்ள செய்தி சமூக வலைதளத்தில் பரவி தற்போது, வைரலாகி வருகிறது. ரூ.100 கடன் பெற்ற நண்பனை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், ரூ.1 கோடி லாட்டரி விழுந்தை பேஸ்புக் நண்பனுக்கு தெரிவித்த பிரபாகரன் உள்ளிட்ட சிலர் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது என்று பேசப்படுகிறது.