அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் மூடப்படுகிறது!

கடந்த வாரம் வியாழன் அன்று, பிலடெல்பியாவில் உள்ள ஸ்டார்பக்ஸ் உணவகத்தில் கறுப்பினத்தவர் இருவர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள 8,000 ஸ்டார்பக்ஸ் உணவகங்களை ஒருநாள் பிற்பகல் மூடுவதற்கு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கழிப்பறையை பயன்படுத்துவதற்கு இருவர் அனுமதி கேட்டபோது, பணம் செலுத்தி பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கே கழிப்பறை வசதி உண்டு என்று ஸ்டார்பக்ஸ் பணியாளர் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் நண்பருக்காக காத்திருந்த வேளையில், காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து எழுந்த பிரச்னையில், ஸ்டார்பக்ஸ் தலைமை செயல் அதிகாரி கெவின் ஜாண்சன், பாதிக்கப்பட்ட இருவரையும் திங்களன்று நேரில் சந்தித்து நடந்த கசப்பான சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தார்.

"மேலும் அர்ப்பணிப்போடு சமுதாயத்தோடு உறவை பேணுவதற்காக, இனப் பாகுபாடு குறித்த பயிற்சி ஒன்றை ஸ்டார்பக்ஸ் தன் பணியாளர்களுக்கு அளிக்க உள்ளது.

வரும் மே மாதம் 29-ம் தேதி பிற்பகல் இப்பயிற்சிக்காக அமெரிக்காவில் உள்ள 8,000 ஸ்டார்பக்ஸ் உணவகங்கள் மூடப்பட்டு, ஒன்றே முக்கால் லட்சம் பணியாளர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். முன்னாள் அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் உள்ளிட்ட வல்லுநர்களின் வழிநடத்துதலின்படி இப்பயிற்சி வடிவமைக்கப்படும்," என்று ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>